Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நடுரோட்டில் குத்தாட்டம்” அரசு பள்ளி மாணவியின் செயல்…. வைரலாகும் காணொளி….!!

அரசு பள்ளி மாணவி பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அங்குள்ள என். ஜி சாலையில் குத்தாட்டம் போட்டா வீடியோ ஒன்று சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   அந்த மாணவி நடுரோட்டில்  ஆடுவதை சில இளைஞர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.  இரண்டு பேர் மேளம் அடிப்பதுமாக அந்த வீடியோ பதிவாகியிருந்தது

அந்த மாணவி இசைக்கு தகுந்தார் போல்  பள்ளி சீருடையில் முதுகில் புத்தகப்பையுடன் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதை அவ்வழியாக சென்ற இளைஞர்கள், பொதுமக்கள் என்று பலரும் வேடிக்கை பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதைபோல் செங்கல்பட்டில் ஓடும் பஸ்சில் அரசு பள்ளி மாணவிகள் மது குடிப்பது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேப்போல் விழுப்புரத்தில் அரசுப்பள்ளி மாணவி பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி வருகின்றது. இது ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |