Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அவ்வபோது அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றதால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனையடுத்து கிரேன் மூலம் லாரியை மீட்டனர். இதனால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |