ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மேற்கு மலை மணியாச்சி பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சாலையின் இரு புறமும் அணிவகுத்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து காட்டு யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Categories