Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. கரூரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் 15 தொழிலாளர்கள் ஒரு வேனில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏமூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது திடீரென வேன் இன்ஜினில் இருந்து கரும்புகள் வெளியேறியது. இதனை பார்த்த ஓட்டுநர் நந்தகுமார் வேனை சாலை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் வேனில் இருந்த அனைவரும் வேகமாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |