Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் நோக்கி மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. சில மோட்டார் சைக்கிள்கள் தீ பற்றியதால் லேசான சேதத்துடன் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த அமைந்தகரை காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |