நடு ரோட்டில் மாணவியை மாணபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது வீட்டுக்கு அருகே சென்றபோது பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் முன்விரோதம் காரணமாக மாணவியை ஆபாசமாக திட்டி மானபங்கம்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இதில் மனமடைந்த மாணவி விஷத்தை குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது பற்றி புகாரின் பேரில் பாரதி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபாசமாக திட்டி மானபங்கபடுத்தியாதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.