சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் தொட்டபுரம், காந்திநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. நேற்று காலை நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூங்கில் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.