Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் வைத்து…. “கடன் கொடுத்தவர் ஏற்படுத்தி அவமானம்”…. தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்..!!

கிணத்துக்கடவு பகுதியில் கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு அவமானப்படுத்தியதால், நடுரோட்டில் தீ குளித்த கோழிக்கடை உரிமையாளர் . இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .

கோவை மாவட்டம் செட்டியக்கா பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய விஜயகுமார். இவர் மனைவி காளீஸ்வரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. விஜயகுமார் 3 கோழி கடைகளை நடத்தி வந்துள்ளார். இது மட்டுமல்லாது அவர் வாட்டர் கேன் சப்ளை தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் தொழிலுக்காக தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 20 ஆயிரத்தை வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய 20 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாய் கடன் அடைத்து விட்டார். மீதமுள்ள பத்தாயிரம் ரூபாய் பணத்தை சிறிது காலத்தில் கட்டி விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். சம்பவத்தன்று விஜயகுமார் வாட்டர் கேன் சப்ளை செய்வதற்காக ஆட்டோவின் புறப்பட்டபோது, அங்கு வந்த கடன் கொடுத்தவர், ஆட்டோவை வழிமறித்து பணத்தை கேட்டேன் மிரட்டியுள்ளார். அதற்கு விஜயகுமார் நாளை தருவதாக கூறியிருக்கிறார்.

இதை ஏற்காத கடன் கொடுத்த நபர் அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த விஜயகுமார் , ஆட்டோவில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டார். தீ  அவரது உடலில் வேகமாக பரவியதால், அதைக் கண்ட கடன் கொடுத்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர் மீது எரிந்த நெருப்பை அணைத்து, அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். பொள்ளாச்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |