அரசு பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்..
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து அரசு பேருந்து மசனகுடி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் டயர் பழுதாகி நடுவழியிலேயே நின்று விட்டது. இதனால் பொதுமக்கள் பாதியிலேயே இறங்கி விட்டனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் இயக்குவதால் அடிக்கடி பேருந்து பாதியிலேயே நின்று விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருந்துகள் பழுதடைந்து நடுவழியில் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே பழுதடைந்த பேருந்துகளை பராமரித்து நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.