Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. ஐயப்ப பக்தர்கள் திடீர் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!

பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் புதுச்சேரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எஞ்சின் பழுதானதால் பேருந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் மாற்று பேருந்தில் ஏறி செல்லுமாறு கண்டக்டரும், டிரைவரும் அறிவுறுத்தினர்.

இதனால் கோபமடைந்த பயணிகள் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டு தான் இந்த பேருந்தில் வந்தோம். திடீரென மாற்று பேருந்தில் சொல்லுங்கள் எனக் கூறினால் குறிப்பிட்ட நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய இயலாது எனக்கு கூறி சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பயணிகள் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |