Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடுவழியில் நின்ற பைக்” டோப் செய்வதாக கூறி கடத்தல்…. போலீஸ் அதிரடி….!!!!

கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சஞ்சய் மற்றும் அத்வைத் ஆகிய 2 பேரிடமும் பெட்ரோல் பங்க் வரை டோப் செய்வதாக கூறியுள்ளனர்.

ஆனால் உதவி செய்வது போல் நடித்த 4 பேரும் ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் 2 பேரையும் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை மிரட்டி ரூ. 3,000 பணம், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் இயர் பட் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், பார்த்தசாரதி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் அடையாளம் காண முடிந்தது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் விலை உயர்ந்த ஒரு வாட்ச்சை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மற்ற 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |