Categories
தேசிய செய்திகள்

நடுவழியில் பிரசவ வலி….. திடீர்னு பிறந்த குழந்தை….. 2 கி.மீ கையில் ஏந்திக்கொண்டே சென்ற கொடுமை….!!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறிய நிலையில் அந்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்ற போது பிரசவ வலி அதிகமாகி, நடு வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் பெண் பிறந்த குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.

Categories

Tech |