அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்வர் பகுதியில் சனிக்கிழமை அன்று மதிய வேளையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஹொனலுலு நகரை நோக்கி பயணிகளுடன் இயக்கப்பட்டது.இந்த விமானத்தில் 231பயணிகளும் மற்றும் 10 விமான பணியாளர்களும் இருந்தன .
இந்த விமானம் 15,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று இஞ்சின் ஒன்றில் தீப்பற்றிக் கொண்டது.இதன் காரணமாக அந்த விமானம் விரைந்து டென்வர் விமானநிலையத்தை நோக்கி இயக்கப்பட்டது. உடனே டென்வெர் விமான நிலையத்திற்கு விபத்தைப் பற்றி தகவல் கூறிய நிலையில், டென்வெர் விமான நிலையத்தில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
டென்வர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் விமானத்தின் சில பாகங்களில் தீ பரவி தரையில் விழுந்து பாகங்கள் சிதறியது. அதில் பயணித்த பயணிகள் இடத்தில் பெரும் அச்சத்தையும் பீதியையும் உள்ளாக்கியது.விமானத்தை செலுத்திய பைலட், தன்னுடைய திறமையினால் எந்த பதட்டமும் இல்லாமல் டென்வர் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் எந்த ஒரு இழப்பும் இல்லாமல் உயிர் பிழைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் விபத்து ஏற்பட்ட போது சிதறிய சில பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து சிதறின.