ரஷ்ய விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் 39 வயதான பெண் ஒருவர் திடீரென எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்துள்ளார். இதையடுத்து விமான பணிப்பெண அந்த பெண்ணை இருக்கையில் அமருமாறு கூறியதைக் கேட்காமல் மறுபடியும் அதே போல அங்குமிங்கும் சென்றுள்ளார். மேலும் அந்த பெண் தன்னுடைய ஆடைகளை களைய ஆரம்பித்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் திரும்பவும் ஆடையை களைய ஆரம்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் விமானி சேர்ந்து அந்த பெண்ணை இருக்கையில் அமரவைத்து கயிறு , சீட் பெல்ட் கொண்டு கட்டி பிறருக்கு தொந்தரவு ஏற்படாதவாறு அமர வைத்துள்ளனர். அந்தப் பெண் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
https://youtu.be/bbfFYvw1zP0