அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் இஞ்சின் கோளாறால் பத்திரமாக தரையிறக்கப்பட நிலையில் அதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் ரக விமானம் சனிக்கிழமை அன்று 10 ஊழியர்கள் மற்றும் 237 பயணிகள் உட்பட ஹொனலுலுவிமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலே வலதுபுறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் பீல்டின் குடியிருப்பு பகுதியில் சிதறியதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விமானம் தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் உடனே கூச்சலிட்டு கத்தியுள்ளனர். அதனால் விமானிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர். அதில் இருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவிக்கொண்டு வருகிறது. நடு வானில் விமானத்தில் தீ பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 237பயணிகளுக்கு ஏதும் ஆகாமல் விமானத்தை தரை இறக்கிய விமணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.