டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட விமான பணிப்பெண், விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருந்தால் சிகிச்சை அளிக்க வருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஆகியோர் பயணிக்கும் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய இணை அமைச்சர் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories