ரஷ்ய எல்லைக்குள் உளவு நடவடிக்கைகளுக்காக வந்த அமெரிக்க விமானத்தை ரஷ்ய போர் விமானம் விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பசுபிக் பெருங்கடலின் மேல்பகுதியில் ரஷ்ய போர் விமானம் அமெரிக்க உளவு விமானத்தை விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் உளவு விமானம் ரஷ்ய எல்லை நோக்கி வந்தவுடன் கிழக்கு இராணுவ மாவட்டத்தின் விமான பாதுகாப்பு படைகளில் இருந்து ரஷ்யMiG-31 விமானம் புறப்பட்டது என்றும் பின்னர் அமெரிக்காவின் RC_135 உளவு விமானத்தை ரஷ்ய விமான குழு தடுத்து திருப்பி அனுப்பியது எனவும் தெரிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1380758483553939462
அதன் பிறகு அமெரிக்க விமானத்தை எல்லை பகுதியில் திருப்பி அனுப்பிவிட்டு ரஷ்ய விமானம் தளத்திற்கு வந்தது என்றும் ரஷ்யா வான்வெளியை பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின்படி செயல்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நோட்டோ விமானம் கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய எல்லைக்குள் உளவு நடவடிக்கைகளுக்காக வந்தது என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அமெரிக்க மற்றும் நோட்டோ விமானங்களின் இத்தகைய செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.