Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்…. திடீரென வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்…. பெரும் பரபரப்பு….!!!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சாம்சங் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டில் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

அதனால் விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பற்றி முழுமையான ஆய்வு நடத்தப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |