நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான பயணத்தின் போது விமானத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் CDU கட்சியைச் சேர்ந்த Karin strenz என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கியூபா நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் விமானத்திலேயே மயங்கி விழுந்தார். இதன் காரணமாக விமானம் அவசரமாக அயர்லாந்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால் முதலுதவி பலனின்றி Karin strenz உயிரிழந்துவிட்டதாக அவசர உதவி குழு மருத்துவர்கள் தெரிவித்தனர். Karin strenz எதற்காக கியூபா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Karin strenz கடந்த 2002 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவர் வடகிழக்கில் மாநில சபை உறுப்பினராக இருந்தார். அதன் பின் கடந்த 2009 முதல் 2017 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இவரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். Karin strenz மீது 4 மில்லியன் யூரோ முறைகேடு வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.