அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டு அலாஸ்கா மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற மாகாணத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா என்ற விமான நிலையம் அருகே நடு வானத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினரான கேரிநோய் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் முதற்கட்ட தகவலின்படி விமானத்தை கேரிநோய் என்பவர் தனியாக ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தில் பயணம் மேற்கொண்ட 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.