வங்கதேசத்தை சேர்ந்த விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்திய விமான எல்லைக்குள் வரும் பொழுது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொல்கத்தா கட்டுப்பாட்டு நிலையம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொண்டது.
நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. நாக்பூரில் விமானம் பாதுகாப்பாகக் தரை இறங்கிய பிறகு விமானி ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க சமயத்தில் துணை விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கிய காரணத்தினால் 126 பயணிகளின் உயிர் தப்பியது. பின்னர் அங்கிருந்து மாற்று குழுவினர் உதவியுடன் பயணிகளை வங்கதேசம் அழைத்து சென்றனர்.