ஆற்றுக்குள் கால்பந்து வீரர்களின் கட் – அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைத்திருக்கின்றனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயரம் கட்-அவுட் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இதே போல் கட்-அவுட் அமைக்க முடிவு செய்து இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று பிரேசில் கால்பந்து ஜான்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் அதே செருபுழா ஆற்றில் கட்-அவுட் அமைத்திருக்கின்றனர். மேலும் இந்த கட்-அவுட் மெஸ்ஸியின் கட்-அவுட்டை விட பத்து அடி உயரமாக 40 அடியில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஆற்றுக்குள் அடுத்தடுத்து மெஸ்சி மற்றும் நெய்மரின் கட்-அவுட்டுகள் காணப்படுவது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.