20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் .
தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது இருசக்கர வாகனத்தில் வைத்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர் .