Categories
தேசிய செய்திகள்

நடு ரோட்டில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்….. எதற்காக தெரியுமா?….. வைரல் வீடியோ….!!!!

மராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல்கேட்டில் ஒரு பெண் ஊழியர் ஒருவர் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர்.

இந்த சண்டையை சுற்றி இருந்தவர்கள் விலகி விடாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதனை வீடியோவாகவும் எடுத்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை இழுப்பதும், அறைவதும், தள்ளுவதும் தெரிகிறது. மேலும் மராத்திய மொழியில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கின்றனர்.

Categories

Tech |