Categories
மாநில செய்திகள்

நடு ரோட்டில் வட்டச் செயலாளர்…. 6 பேர் கொண்ட கும்பலின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரில் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தன் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து உடன் இருந்தவர்கள் செல்வத்தை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு செல்வம் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தினால் மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

188-வது வார்டு திமுக வட்டச் செயலாளரான செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தன் மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்த நிலையில்
கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |