Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் புதுத்தெருவில் அறிவாளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலகவதி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வழக்கம்போல பட்டமங்கலம் புதுத்தெருவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நடைபயிற்சி சென்றுள்ளனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |