Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் வீடிற்குள் புகுந்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் தெருவில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

உடனே விரைந்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமியின் மணி பர்சில் இருந்த 53 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது . இதுகுறித்து விஜயலட்சுமி அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |