Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள்…. என்ஜினியர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி வரை இருக்கும் உள்வட்ட சாலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் புழுதிவாக்கம் பகுதியில் தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விடுவதாக மடிப்பாக்கம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பெண்களிடம் சில்மிஷம் செய்தவர் கைவேலி தந்தை பெரியார் நகரில் வசிக்கும் என்ஜினீயரான ஆதம் அலி என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே பெண்களிடம் அத்து மீறியதாக காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது.

Categories

Tech |