மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது தெருவில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.