ராணுவ வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் வ.உ.சி நகரில் வாசுதேவன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா(45) என்ற மனைவியும், சோனாலி, ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். தற்போது வாசுதேவன் குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வாசுதேவன் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வாசுதேவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை அன்று வாசுதேவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.