Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடைபாதைகள் ஆக்கிரமிப்பு”…. பெறப்பட்ட புகார்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!!

சென்னையில் பல்வேறு இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகாகி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக புகார்களும் அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகில் 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி எழும்பூர் ரயில் நிலையம் முன் காந்திஇர்வின் சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று காலை 20 மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்றினர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, நீதிமன்ற உத்தரவின்படி எழும்பூரில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 60 கடைகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

Categories

Tech |