டெல்லியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 27 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மாமாவுக்காக புதிதாக வாங்கிய பி.எம்.டபிள்யூ. கார் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை அறிந்துகொள்ளவதற்காக, காரை வேகமாக ஓட்டிச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ஜூன் 10ஆம் தேதி நடந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Categories