Categories
உலக செய்திகள்

நடைபாதை மேம்பாலம்…. திறப்பு விழாவின் போது நடந்த அசம்பாவிதம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் புதியதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் திறப்பு  விழாவின்போது  திடீரென இடிந்து  விழுந்தது.

மெக்சிகோ நாட்டில் மொரிலொஸ் என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஹர்வவசா என்ற நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு செயினால் புதியதாக நடைமேடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து  வைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவின் போது அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் அனைவரும் நடந்து சென்றனர். அப்பொழுது பாரம் தாங்காமல் புதியதாக கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த மேம்பாலத்தில்  நடந்து சென்றுகொண்டிருந்த நகர மேயர் ஜோஸ் லுயிஸ் யுரியோசெட்யு உள்பட பலர் 10 அடி பள்ளத்தில் விழுந்தனர். மேலும் அளவுக்கு  அதிகமான பாரம் இருந்ததால் எடை தாக்காமல் நடைமேடை பாலம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |