நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் நகர வீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சூப்பிரண்டு அதிகரி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களையும் வழங்கிய அவர்கள் முககவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கண்டித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், 18 வயது மேற்பட்டவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செளுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.