பேரூராட்சி தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், மணல்மேடு காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பு மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் புறப்பட்டு மணல்மேடு பேரூராட்சி சார்ந்த வார்டுகள் வழியாக சென்று காவல்நிலையத்தில் முடிந்துள்ளது.