Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெறும் இளவட்ட மஞ்சுவிரட்டு…. முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி….கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான  முகூர்த்தக்கால் நடும் விழா  நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் இளவட்ட  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகச்சிக்கான   முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, துணைதலைவர் இந்தியன் செந்தில்,பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயந்தன், ஊராட்சி மன்ற தலைவர் தாயுமானவன், சமூக ஆர்வலர் குகன், சத்தியன், தினேஷ், தொழிலதிபர் ஆர். எம். எஸ். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான  முகூர்த்தக்கால்  நட்டு  பணிகளை தொடங்கி வைத்துள்ளனர்.

Categories

Tech |