கொன்யாவில் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் ரெய்லா ஒடிங்கா , வில்லியம் ரூட்டோ ஆகிய இரண்டு பேரும் போட்டியிட்டனர். ஆனால் ரெய்லா ஒடிங்காவை விட வில்லியம் ரூட்டோ சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவை நிராகரித்து கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று வில்லியம் ரூட்டோ கென்யாவின் 5-வது அதிபராக பதவி ஏற்றார்.