Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. கலந்து கொண்ட கோவில் பூசாரிகள்….!!

கோவில் பூசாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து கிராம கோவில் பூசாரி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பூ  கட்டுவோர் கமிட்டி மாவட்ட அமைப்பாளர் சக்திசெல்வி, மண்டல அமைப்பாளர் பாவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பூசாரிகள், பூ கட்டுவோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கிராமப்புற பூசாரி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனையடுத்து கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், மேலும் அனைத்து  கோவில்களிலும் இலவச மின்சாரம் மற்றும் பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், வயதான  பூசாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |