ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கபட்டுள்ளார்.
அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனையடுத்து ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் கைபேசி கொண்டுவரக் கூடாது எனவும் மீறினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும் என அறிவித்துள்ளனர்.