கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிதவியல் துறை தலைவர் கோபிநாத், கல்லூரி முதல்வர் அன்பரசி, பேராசிரியர் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.