பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், குடிநீர் வசதி போன்ற 295 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஒரு கொரோனா தொற்றின் காரணமாக தாய், தந்தையை இழந்த ரூபினி என்ற சிறுமிக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான பத்திரத்தை வழங்கியுள்ளார்.