Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறை நாள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அதிக அளவில் மணிலா பயிர் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பயிர்கள் 6 மாத காலத்திற்குள் சாகுபடி செய்வதால் அதனை அதிகளவில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த பயிர்களை அதிக அளவில் பிரித்தெடுக்கும் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்படுத்துவது குறித்து மேலாண்மை துறை அதிகாரிகள் சார்பில் முகாம் முதல் நடைபெறுகிறது. மேலும்  விவசாயிகள் கிசான்  அட்டை மூலம் பயிர் கடன் பெறலாம். இந்த அட்டை இல்லாதவர்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |