கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர், 15 வார்டுகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 1,15,9,7, ஆகிய வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.
ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் 25- வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மாதா கோவில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும் எனவும், ஆரோக்கியபுரம் முதல் மேற்கு ஆரோக்கிபுரம் வரை குடிநீர் செல்லும் வகையில் பைப்லைன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவுன்சிலர்கள் சார்பில் அளிக்கப்பட்டது.