மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்த தேசிய நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகள் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடைபெற்ற இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, மாவட்ட விரைவு மகளிர் நீதிமர்ண நீதிபதி சுபத்ரா, நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி சிட்டிபாபு, வக்கீல் சங்க தலைவர் ரவிசந்திர ரமாவன்னி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.