வியாபாரிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி பகுதியில் ஜோதி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா சங்க தலைவர் டி.எம் சண்முகம், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணை தலைவர் விஜயராகவன், இணை செயலாளர் உத்தம்சந்த், முன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தாலுகா சங்க தலைவர் டி.எம். சண்முகம் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றியுள்ளார்.