பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.
சென்னையில் நடைபெற இருக்கிற செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கென விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காமராஜ் பெண்கள் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நேற்று காலை நடந்தது.
அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.