Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மண்டபத்தில் வைத்து பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், கவுன்சிலர் செந்தில், கிருஷ்ணன், திவ்யா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து  மற்றும் துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் சேர்ந்து முகாமை தொடங்கி வைத்துள்ளனர். இந்த முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு முன்னுதாரணமாய்  பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |