சிமெண்ட் சீட் மீது மரம் விழுந்த விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது திடீரென அருகே இருந்த பப்பாளி மரம் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் சீட் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சத்தியபாமா, மணிகண்டன் என்ற 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றி இருக்கும் அனைத்து மரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.