தற்காப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக காவல்துறையினர் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் இருக்கும் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம் காவல்துறையினர் சார்பில் நடந்துள்ளது. இதற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமை வகித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில்வடிவு, முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கியுள்ளார்.
இந்த முகாமில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா பங்கேற்று மாணவிகளுக்கு செல்போன் பயன்பாட்டின் பாதிப்புகளை கூறியுள்ளார். மேலும் ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளார். இந்த பாதுகாப்பு முகாமின் மூலமாக பள்ளி மாணவிகள் தற்காப்பு பற்றி அறிந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த முகாமில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.