சுரிமாரியம்மன் ஆலயத் திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரில் சுரிமாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றுள்ளது.
இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துள்ளனர். இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.